காதலால் வந்த வெற்றி: நடைபாதை விற்பனையாளர் கோடீஸ்வரரான கதை

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்
191Shares

நடை பாதையில் பொக்கே கடை தொடங்கி கோடீஸ்வரனாக முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் பீகாரைச் சேர்ந்த விகாஸ் குத்குத்யா.

48வயதாகும் விகாஸ் ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர்.

டெல்லியில் நடைபாதையில் 200 ச.அடி இடத்தில் தொடங்கிய இவரது பொக்கே கடை இன்று 93 நகரங்களில் 240 கிளைகளைக் கொண்டு விரிவடைந்துள்ளது.

சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த குத்குத்யா, மேல்படிப்பிற்காக கொல்கத்தா சென்ற போது தன் மாமாவின் பொக்கே கடையில் வேலை பார்த்து தொழிலைக் கற்றுக் கொண்டார். படிப்பை முடித்து வேலைக்கான வாய்ப்பு தேடி குத்குத்யா மும்பைச் சென்றார்.

1994-ஆம் ஆண்டு தன் பெண் தோழி மீட்டாவுக்கு மலர்கொத்தை பிறந்த நாள் பரிசாக அனுப்பிய குத்குத்யா, அது தரமாக இல்லாததைக் கண்டு மனம் வருந்தினார். அதையே வாய்ப்பாகக் கொண்டு தரமான ஒரு பொக்கே மலர் கடையைத் திறக்க முடிவு செய்தார்.

நண்பர் ஒருவரின் உதவியோடும், தன் கையில் இருந்த 5000 ரூபாய் பணத்தை முதலீடு செய்து ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் என்ற கடையை ஆரம்பித்தார்.

பொக்கே விற்பது மட்டுமின்றி விதைகள் தேர்வு, பயிரிடுதல், கிளைகள், விநியோகம் செய்தல் என பிசியாகவே இருந்த குத்குத்யாவின் வாழ்வில் பெரும் மாற்றம் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்டது. திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலை அலங்கரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தியவர் அதன் மூலம் வியாபாரத்தை பரிந்துரைகளின் பேரில் விரிவுபடுத்தினார்.கட் ப்ளவர்கள் மூலம் அலங்காரம் செய்யும் புதிய முறையைப் பயன்படுத்தி தன் தொழிலில் புரட்சியை செய்தார். மலர் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினதோடு மட்டுமல்லாமல் ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் ஃப்ளோரல் டிசைன்ஸ் என்ற பள்ளியையும் தொடங்கினார்.

2002- ஆம் ஆண்டு ஆன்லைனில் ஸ்டோர் தொடங்கினார்.2003- இல் பேஷன் டிசைனர் தருண் ஹிலானியுடன் இணைந்து ஆடம்பர பொக்கே மலர்கள் விற்பனை செய்ய ஆரம்பித்த இவர் வியாபாரம் 2016 ஆம் ஆண்டு 200 கோடி வருவாயைத் தொட்டது.

இந்நிறுவனத்தின் டைரக்டர் மற்றும் கிரியேட்டிவ் ஹெட் ஆக உள்ள மனைவி மீட்டா பொக்கே மலர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குவது நெகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார்.

இந்நிறுவனத்திற்கு பிசினஸ் லீடர்ஷிப் உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்