ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி குடும்பம்

Report Print Kabilan in தொழிலதிபர்

பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது.

ஆசியாவின் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள உலக பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.1,25,400 கோடியில் இருந்து ரூ.2,95,680 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனால் அம்பானி குடும்பம் பணக்கார குடும்பங்களில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லீ-யின் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.2,69,280 கோடியாகும்.

மூன்றாவது இடத்தில் ஹாங்காங்கைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவோக் குடும்பமும், நான்காவது இடத்தில் தாய்லாந்தின் சரோவனோட் குடும்பமும் உள்ளன.

முதல் பத்து இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த அம்பானி குடும்பம் மட்டுமே உள்ளது. எனினும், 10க்கும் மேற்பட்ட பட்டியலில் பல இந்திய குடும்பங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers