பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர் இன்று கோடீஸ்வர தொழிலதிபர்: சாதனை தமிழரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்

மில்கி மிஸ்ட் என்ற நிறுவனம் பன்னீர், வெண்ணெய், தயிர், சீஸ் வகைகள், நெய், லஸ்ஸி, பாலாடை போன்ற பலவிதமான பால்பொருட்களை தயாரித்து வருகிறது.

மில்கி மிஸ்டின் நிறுவனர் பெயர் சதீஷ்குமார் (40), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

சதீஷ்குமாரின் தந்தை 1983-ல் விசைத்தறி யூனிட்டை தன் சகோதரருடன் இணைந்து தொடங்கினார். அந்த தொழில் சிறப்பாக போகாத காரணத்தால் மூன்று ஆண்டுகளில் அதை விற்றுவிட்டார்.

பின்னர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரின் தந்தை, பால் வாங்கி அதை கேன்களில் விற்கும் தொழிலை செய்தார். அதையும் கடந்த 1992ல் விட்டு விட அவர் முடிவு செய்தார்.

அப்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சதீஷ்குமார் தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அப்பாவின் பால் தொழிலில் இறங்க முடிவு செய்தார்.

தற்போது மில்கி மிஸ்ட் நிறுவனத்தினர் பொருட்களை தயாரிக்க தினமும் 1.7 லட்சம் லிட்டர் பால் வாங்குகிறார்கள்

தொழிலுக்காக யோசனைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது பெங்களூரில் ஒருவர் பாலில் இருந்து பன்னீர் தயாரிப்பதை சதீஷ்குமார் அறிந்தார்.

பிறகு, பாலை சூடாக்கி வினிகரை சேர்த்தால் பன்னீர் கிடைக்கும் என்பதை அறிந்த சதீஷ்குமார் அதை செய்து பார்க்க தரமுள்ள பன்னீர் கிடைத்தது.

பின்னர், 1993-ல் சதீஷ் தாங்கள் முதலில் தயாரித்த 10 கிலோ பன்னீரை பெங்களூருக்கு ஒரு பையில் போட்டு அனுப்பினார்.

இது, 1995ல் 100 கிலோவாக ஆனது. பிறகு தங்கள் நிறுவனத்துக்கு என பிராண்ட் பெயரை தெரிவு செய்ய நினைத்த சதீஷ்குமார் இணையத்தின் உதவியுடன் மில்கி மிஸ்ட் என்ற பெயரை தெரிவு செய்தார்.

பிறகு, 1998-ல் 10 லட்ச ரூபாய் வங்கிக்கடன் பெற்று தானியங்கி ஆலை ஒன்றை அமைத்தார்.

2001ல் தங்கள் நிறுவனத்தை வாடகை இடத்தில் இருந்து சித்தோட்டில் சொந்த இடத்துக்கு மாற்றினர். அப்போது அவர்களின் விற்பனை ஆண்டுக்கு 2 கோடி ரூபாயாக இருந்தது.

பின்னர், அப்படியே வியாபாரம் மெல்ல மெல்ல பெருக தொடங்கியது.

2020ல் 3000 கோடிகள் வர்த்தகம் செய்யவேண்டும் என்பது சதீஷ்குமாரின் இலக்காக உள்ளது.

2008-09-ல் 25 கோடிகளாகவும் 2009-10ல் 35 கோடிகளாகவும் 2010-11ல் 39 கோடிகளாகவும் 2011-12-ல் 48 கோடிகளாகவும் 2012-13-ல் 69 கோடிகளாகவும் 2013-14-ல் 121 கோடிகளாகவும் மில்கி மிஸ்டின் வர்த்தகம் வளர்ந்துள்ளது.

2010-ல் மில்கி மிஸ்ட்டுக்காக முதல் டிவி விளம்பரம் வெளியிடப்பட்டது. அது தென்னிந்தியாவின் லட்சக்கணக்கான மக்களிடையே நல்ல அறிமுகத்தை அந்நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது.

சதீஷ்குமாருக்கு அனிதா என்ற மனைவியும், சஞ்சய் மற்றும் நிதின் என இரு பிள்ளைகளும் உள்ளனர்.

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு ஜெயித்த தங்கள் தந்தையைப் பார்த்து வீட்டில் உள்ள அவர் குழந்தைகள் நாங்கள் மட்டும் ஏன் படிக்கவேண்டும் என்று கேட்கிறார்களாம்!

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers