பள்ளி படிப்பு கூட முடிக்கலை.. ஆனால் இன்று கோடீஸ்வரர்

Report Print Fathima Fathima in தொழிலதிபர்

தென் கொரியாவில் பள்ளிப்படிப்பை முடிக்காத நபர் இன்று கோடீஸ்வரராகி சாதனை புரிந்துள்ளார்.

தென் கொரியாவை சேர்ந்தவர் பாங்க் ஜன் ஹ்யூக், பள்ளிப்படிப்பை கூட முடிக்காத நிலையில் 2000ம் ஆண்டு நெட்மார்பிள் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.

தொடக்கத்தில் வெறும் 8 ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தை, 2011ம் ஆண்டு பெரிதுபடுத்தினார்.

கணனி விளையாட்டுகளில் பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதுப்புது நுட்பங்களுடன் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியது.

இதன் காரணமாக ஆசிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நெட்மார்பிள் விளையாட்டுகள் பிரபலமடைந்தன.

தென் கொரியாவில் அறிமுகப்படுத்திய லினேஜ் 2 ரெவல்யூசன் என்ற மொபைல் விளையாட்டு முதல் மாதத்திலேயே 17.6 கோடி டொலர் வருமானத்தை தந்தது.

சண்டை விளையாட்டுகள் மட்டுமின்றி அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா உட்பட பல விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தியது.

தொடர்ந்து பல்வேறு வெற்றிகளின் மூலம் கடந்த 2015ம் ஆண்டு அப்பிளிக்கேஷன் விற்பனையில் இவரது நிறுவனம் 8வது இடத்தை பிடித்தது.

தொடர்ச்சியாக 2015ம் ஆண்டு போர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட கோடீஸ்வர பட்டியலில் இடம்பிடித்தார் பாங்க் ஜன் ஹ்யூக்.

குறிப்பாக நெட்மார்பிள் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு மிகப் பெரிய நிறுவனமான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட அதிகம்.

தொடர் முயற்சியின் பலனாக தற்போது கணனி விளையாட்டுகள் மற்றும் மொபைல் விளையாட்டுகள் துறையில் சர்வதேச அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments