தள்ளு வண்டியில் ஐஸ் விற்று பல கோடிகளுக்கு அதிபரான சந்திர மோகன்

Report Print Raju Raju in தொழிலதிபர்

அருண் ஐஸ்கிரீம், ஆரோக்கியா பால், ஹாட்சன் நெய்கள். இது உலகறிந்த பிரபல உணவு நிறுவனமாகும்.

இதன் நிறுவனர் சந்திரமோகன். இவர் பள்ளி மாணவராக இருக்கும் போது தினமும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பின்னர் தன் படிப்பு முடிந்தவுடன் தனக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் சார்ந்த தொழிலை தொடங்க சந்திர மோகன் முடிவு செய்தார்.

கடந்த 1970ல் தனது 21வது வயதில் 13000 ரூபாய் முதலீட்டுடன் அருண் ஐஸ்கிரீம் நிறுவனத்தை தொடங்கினார்.

முதலில் அவர் தொழிற்சாலையிலிருந்து ஒரு நாளுக்கு 20 லிட்டர் ஐஸ்கிரீமை 4 வேலையாட்கள் தயாரித்தனர்.

10 பைசாவுக்கு ஒரு ஐஸ்கிரீம் என முதலில் அருண் ஐஸ்கிரீம் விற்கப்பட்டது.

அந்த சமயத்தில் குவாலிட்டி வால்ஸ், ஜாய் போன்ற போட்டி நிறுவனத்தால் அருண் நிறுவனம் சிறிது திணறியது.

பின்னர் அருண் ஐஸ்கிரீம் சுவையாலும், தரத்தாலும் மக்கள் நம்பிக்கையை கெட்டியாக பிடித்து கொண்டது.

1991ல் அருண் நிறுவனம் ரூ.3 கோடி விற்று முதலை பதிவு செய்து சாதனைப் படைத்தது

பின்னர் பல ஊர்களுக்கு அருண் ஐஸ்கிரீமை விநியோகிக்க தொடங்கிய சந்திர மோகன் 1995ல் ஆரோக்கியா பால் நிறுவனத்தையும் தொடங்கினார்.

இன்று ஆரோக்யா வருடாந்திர லாபமாக ரூ 1,300 கோடிகளைப் பார்க்கிறது.

அதன்பின்னர் ஹாட்சன் நெய்கள், இபாகோ ஐஸ்கிரீம் என்னும் துணை நிறுவனத்தையும் தொடங்கி இன்று தனது கடின உழைப்பால் 3400 கோடிக்கும் மேலாக சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார் சந்திர மோகன்.

ஐஸ்கிரீம் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் சந்திர மோகன் இன்றும் விரும்பி ருசிப்பது சாக்லேட் கோன் ஐஸ் தான்!.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments