நெல்லிக்காயால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்

Report Print Raju Raju in தொழிலதிபர்
4193Shares

அம்ரிதா நிறுவனத்தில் தயாராகும் உணவு பொருட்கள் என்றால் இந்தியாவில் பல இடங்களில் இன்று பிரபலம்.

இதன் நிறுவனர் அமர் சிங், இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபர்.

அமர் சிங் (57) இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இவர் தந்தை காலமானார்.

இறக்கும் போது நிறைய விவசாய நிலங்களை தன் குடும்பத்துக்கு அவர் விட்டு சென்றார்.

அமர்சிங் வீட்டின் மூத்த மகன் என்பதால் படிப்பை நிறுத்தி விட்டு ஆட்டோ ஓட்ட தொடங்கினார்.

பின்னர் குஜராத்தில் உள்ள தன் மாமா வீட்டுக்கு சென்று அவர் போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தார்.

அமர் சிங்கின் தாய் தனது விவசாய நிலத்தில் கடுகு, கோதுமை போன்றவற்றை வேலைக்கு ஆட்களை வைத்து விதைத்தார்.

ஆனால் அவர்கள் அமர்சிங் தாயை ஏமாற்றி லாபத்தை எடுத்து கொண்டனர்.

பின்னர் அமர் சிங்கை அவர் தாய் ஊருக்கே அழைத்தார். ஊருக்கு வந்த அமர் சிங் கண்ணில் ஒரு தினசரி நாளிதழின் துண்டு பட்டுள்ளது. அதில் நெல்லிக்காயை பற்றியும், அது உடலுக்கு தரும் ஆரோக்கியத்தை பற்றியும் எழுதியிருந்தது.

உடனே அமர் சிங் நெல்லிகாய் செடிகளை தன் நிலத்தில் பயிரிட முடிவு செய்தார்.

முதலில் 60 செடிகளை வாங்கிய அவர் பின்னர் அதிகளவில் செடிகள் நட்டு அதை விதைக்க தொடங்கினார்.

நெல்லிகாய் மரங்கள் அருமையாக வளர ஆரம்பித்தன. பின்னர் அதில் இருக்கும் நெல்லிகாய்களை லாபகரமாக விற்று முதல் வருடத்திலேயே 7 லட்சம் அளவு சம்பாதித்தார்.

பின்னர் சில வருடங்கள் கழித்து, தானே ஏன் நெல்லிக்காய் சம்மந்த பொருட்களை தயாரிக்ககூடாது என எண்ணிய அமர் சிங் அதை செய்யும் செயலிலும் இறங்கினார்.

கடந்த 2003ல் உணவு பொருட்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து நெல்லிக்காய் மூலம் தயாராகும் Murabba (இனிப்பு பழங்கள்) நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஜாம், லட்டு, சாக்லேட் போன்றவறை தயாரிக்க கற்று கொண்டார்.

அவருக்கு தொழில் கற்று கொடுத்த நிறுவனமே அவரின் தொழில் முதலீட்டுக்கு உதவியது.

அவர் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் போட்டு 5 லட்சத்தில் 10 பேருடன் தொழிற்சாலை நிறுவனம் தொடங்கினார்.

பின்னர் நெல்லிக்காய்களால ஆகும் பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார்.

அவரின் தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நெல்லிக்காய் மரங்கள் உள்ளது. ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு 250 கிலோ நெல்லிக்காய் கிடைக்கிறது.

வருடத்துக்கு 26 லட்சம் வருமானம் வந்தாலும் அமர் சிங் இன்னும் தனது பழைய எளிமையான வாழ்க்கையே கடைப்பிடிக்கிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments