அழகிய காதல் மனைவியை விவாகரத்து செய்ததது ஏன்? நடிகர் விஷ்ணு விஷால் உருக்கத்துடன் கூறிய காரணம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான விஷ்ணு விஷால் மனைவியை விவகாரத்து செய்தது ஏன் என்பது குறித்து முதல் முறையாக விளக்கமளித்துள்ளார்.

நடிகரான விஷ்ணு விஷால் கடந்த 2011-ஆம் ஆண்டு இயக்குனராக கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ர மகன் உள்ளார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று என்னவானது என்று தெரியவில்லை, கடந்த ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு கோரியிருந்தனர்.

அதன் பின் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் திகதி இருவருக்கும் விவாகரத்து அளிக்கப்பட்டது. இந்த விவாகரத்து குறித்து விஷ்ணு விஷால் அறிக்கை மட்டுமே விட்டிருந்தாரே தவிர, அதற்கான காரணத்தை வெளியில் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு விவாகரத்திற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதில், நான் என் வாழ்வில் உணர்ந்த ஒரு விஷயம் எதுவும் நிச்சயம் கிடையாது. எதுவும் அப்போதும் வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்பது மட்டுமே, குறிப்பாக என் வாழ்வில் நான் உறுதியாக இருந்த விஷம் திருமணம் தான், ஆனால் அதுவும் இப்போதும் இல்லை.

என்னால் இன்று வரை கூட என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த நபர், அப்போது இருந்த நிலையில் இப்போது நான் இருந்திருந்தால், இந்த பேட்டியைக் கூட கொடுத்திருக்கமாட்டேன்.

நம்பிக்கை குறைவாகவே இருப்பேன். என்னை, சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த்ததே கிடையாது. எனது அப்பாவைப் பார்த்து, புத்திசாலியான என் சகோதரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வாழ்வில் நான் தொடவே முடியாது என்று நினைத்தவன்.

இதனால் இதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்பதற்காக எல்லோருடனும் சகஜமாக பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன்.

அங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பித்தது. நீ மாறிவிட்டாய் என்றெல்லாம் பேச்சு வந்தது. அப்படியே அது, நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற நிலைக்கு மாறியது.

நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக.

இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன்.

நான், எனது துறையில் மிகக் கடினமாக உழைத்துள்ளேன். பலருக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீதியாக வருத்தத்தில்தான் இருக்கிறேன்.

ஆனால், வேலை எனது கவனத்தைத் திசை திருப்புகிறது. நான், எனது மகனைப் பற்றி நினைக்கிறேன். அவரையும், அவரது அம்மாவையும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers