திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்! அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
45Shares

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் வருண் தவான் விபத்தில் சிக்கினார் என தெரியவந்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வருண் தவானுக்கும், அவரின் நீண்ட கால காதலியான ஃபேஷன் டிசைனர் நடாஷா தலாலுக்கும் அலிபாக்கில் இன்று திருமணம் நடைபெறுகிறது.

5 நாட்கள் திருமண கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. வருண் தன் நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் வருண் தவான் அலிபாக்கிற்கு வந்த கார் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. அந்த விபத்தில் வருண் உள்ளிட்ட யாரும் காயம் அடையவில்லை. காருக்கு தான் நல்ல சேதமாம். இந்த சம்பவத்தால் வருண் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்திற்கு பிறகு வருண் வழியிலேயே ஒரு இடத்தில் தங்கிவிட்டு நேற்று மதியம் தான் திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்தாராம். மெஹந்தி, ஹல்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்