பிரபல தமிழ் திரைப்பட நடிகை கயல் ஆனந்திக்கு ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பொறியாளன், கயல், சண்டி வீரன் , விசாரணை , பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் ஆனந்தி.
இந்நிலையில் ஜனவரி 7 அன்று இரவு 8 மணிக்கு வாரங்கல்லில் உள்ள கோடம் கன்வென்சன் செண்டரில் ஆனந்திக்கு திருமணம் நடைப்பெற்றது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .
ஆனந்தி திருமணம் செய்துக் கொள்ளும் நபரின் பெயர் சாக்ரட்டீஸ்.
திரையுலகின் சார்பில் இயக்குனர் நவீன் , தயாரிப்பாளர்கள் டி.சிவா , சதீஷ் ஆகியோர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன .