தனக்கும் சித்ராவுக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை! கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி மனு

Report Print Kavitha in பொழுதுபோக்கு
213Shares

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் இருக்கும் சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பின், அவரது கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்து பல கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

இந்தநிலையில் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதில் தனக்கும் சித்ராவுக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார்.

அதன் பின், மனுவுக்கு ஜனவரி 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக சித்ராவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்