சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையின்படியே சித்ரா தற்கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை சித்ரா நேற்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.
அவரது கன்னத்தில் காயம் இருந்ததால் அவர் சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். அதே சமயம் சித்ராவின் குடும்பத்தினர் தரப்பில், அவர் கணவர் ஹேமந்த் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சித்ராவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. பிரேத பரிசோதனையின் முதல்கட்ட தகவலின் அடிப்படையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் சித்ரா கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையது தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர் தற்கொலையில் சந்தேகம் எதுவும் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.