அவள் என் மனைவி! அவளுக்கு நான்கு பேருடன் முறையற்ற தொடர்பு: பிரபல நடிகையைப் பற்றி ஹோட்டல் அதிபர் அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
1884Shares

பிரபல திரைப்பட நடிகையான பவித்ரா புனியா தன் மனைவி என்றும், அவருக்கு நான்கு பேருடன் முறையற்றம் பழக்கம் வைத்திருந்ததாக ஹோட்டல் அதிபர் சுமித் மகேஸ்வரி கூறியுள்ளார்.

சித்தார்த்தா-லவ் லஸ்ட் பீஸ் படத்தில் நடித்து பிரபலமான நடிகை பவித்ரா புனியா தற்போது டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனில் பவித்ரா கலந்து கொண்டார்.

நேற்று முன் தினம் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பவித்ரா புனியா தன் மனைவி என்று ஹோட்டல் அதிபர் சுமித் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இவர் குறித்து சுமித் மகேஸ்வரி கூறுகையில், எனக்கும், பவித்ரா புனியாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டோம். ஆனால் பவித்ரா எங்கள் திருமணத்தை பற்றி வெளியே சொல்லவில்லை. பவித்ரா என் மனைவி. அவர் நான்கு முறை முறையற்ற பழக்கம் வைத்து என்னை ஏமாற்றியிருக்கிறார்.

பராஸ் சப்ரா, ப்ரதிக் செஹஜ்பல் மற்றும் நடிப்புத் துறையை சேராத ஒருவருடன் பவித்ராவுக்கு தொடர்பு இருந்தது. பராஸுடனான முறையற்ற தொடர்பு தெரிய வந்ததும் நான் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். எங்களுக்கு விவாகரத்து கிடைத்த பிறகு நீங்கள் பவித்ராவுடன் இருக்கலாம் என்று நான் பராஸ் சப்ராவிடம் கூறினேன்.

பவித்ராவின் பெயரை என் கையில் பச்சை குத்தியிருக்கிறேன். அது இன்னும் என் கையில் உள்ளது. என் பக்கம் எதுவுமே மாறவில்லை.

வித்ராவின் செயலால் என் குடும்பத்தார் வேதனை அடைந்தனர். எங்களுக்கு விவாகரத்து கிடைத்த பிறகு அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் கேட்க மாட்டோம் என்றார்.

பவித்ரா பராஸ் சப்ராவை காதலித்தது பிரிந்தது அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் 14 வீட்டில் இருந்தபோது பவித்ராவுக்கும், சக போட்டியாளரான ஐஜாஸ் கானுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. அப்பொழுது தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக பவித்ரா தெரிவித்தார்.

பிக் பாஸ் வீட்டில் பவித்ராவும், கானும் தான் ஒன்றாக நேரம் செலவிட்டார்கள். பல காலம் கழித்து தனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்று ஐஜாஸ் கான் தெரிவித்தார். இந்நிலையில் பவித்ரா தன் மனைவி என்று சுமித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்