பிரபல திரைப்பட நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1191Shares

பிரபல திரைப்பட நடிகர் யாத கிருஷ்ணா மாரடைப்பால் தனது 61வது வயதில் காலமானார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் யாத கிருஷ்ணா. இவர் 20க்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளராகவும் கிருஷ்ணா இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக சில காலமாக திரையுலகில் இருந்து கிருஷ்ணா ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் இன்று கிருஷ்ணா மாரடைப்பால் திடீரென மரணமடைந்துள்ளார்.

அவரின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்