நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் மாறிய மாணவியின் வாழ்க்கை! குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
717Shares

பிரபல நடிகை சிவகார்த்திகேயன் செய்த உதவியால் ஏழை மாணவி ஒருவர் மருத்துவர் ஆகி சாதித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சகானா.

இவரது பெற்றோர் கணேசன், சித்ரா தையல் தொழில் செய்து வருகின்றனர், மூத்த சகோதரி தேவிபாலா மாஸ்டர் டிகிரி படித்துள்ளார். சகானா பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். பொதுத்தேர்வில் 524 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தார்.

எனினும், நீட் தேர்வு எழுதியதில் இவரால் தேர்ச்சிபெற மட்டுமே முடிந்தது, மருத்துவ படிப்பில் சேர்வதற்னான கட் ஆப் மதிப்பெண் கிடைக்கப்பெறவில்லை. மாணவி குறித்து விவரம் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் மாணவி சகானாவை தனியார் நீட் பயிற்சி மையத்தில்சேர்ந்து பயிற்சி பெற நிதியுதவி செய்தார்.

இந்நிலையில், சகானா நீட் தேர்வில் வெற்றிபெற்று தற்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தார்கள் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்ததோடு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய அரசுக்கும் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.

வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தினால் மண்ணென்ணெய் விளக்கில் படித்த மாணவிக்கு பெரிய உதவி செய்து அவர் சாதிக்க உதவிய நடிகர் சிவகார்த்திகேயனை பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்