முதல் மனைவியுடன் விவாகரத்து! பின்னர் நயன்தாராவுடன் ஏற்பட்ட பிரிவு.. தற்போது மறுமணம் செய்து கொண்ட நடிகர் பிரபுதேவா

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
5099Shares

பிரபல நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா சில மாதங்களுக்கு முன்பு ரகசியத் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இந்திய திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும், வலம் வருபவர் பிரபுதேவா.

இவருக்கும் ரமலதா என்ற பெண்ணுக்கும் 1995ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது, பின்னர் 2009 காலக்கட்டத்தில் நடிகை நயன்தாராவுடன் காதல் வயப்பட்ட பிரபுதேவா லிவிங் டூ கெதர் வாழ்ந்தார்.

இதனால் மனைவியுடன் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரமலதாவை பிரபுதேவா விவாகரத்து செய்தார். மேலும் நயன்தாராவையும் பிரிந்தார். இதன் பின்னர் சினிமாவில் தனது முழு கவனத்தை பிரபுதேவா செலுத்தினார்.

இந்த நிலையில் பிரபுதேவாவுக்கு கடும் முதுகு வலி இருக்கும்போது, அவருக்கு பிசியோதெரபி பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்பு, பெண் வீட்டினர் சம்மதத்துடன் சென்னையிலுள்ள பிரபுதேவா இல்லத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பெண்ணின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்தத் திருமணத்தில் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

பிரபுதேவாவுடன் பணிபுரிந்து வரும் யாருக்குமே, இந்தத் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரபுதேவாவுக்கு மீண்டும் திருமணம் என்ற தகவல் வெளியானவுடன்தான் அவர்களும் விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.

திரையுலகினர் பலரும் பிரபுதேவாவுக்குத் தனிப்பட்ட முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

You May Like This Video

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்