பிரபல நடிகர் தவசிக்கு வந்த நோய்! முற்றிலும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் போன பரிதாப வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு
1188Shares

நடிகர் சிவகார்த்திகேயன் படம் மூலம் பிரபலமான நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2013-ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நடிகர் சூரியின் தந்தையாக தவசி நடித்திருப்பார். இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், இப்படம் மூலமே அவரை பலருக்கும் தெரிந்தது.

அதன் பின் ரஜினி முருகன், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முற்றுலும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். தற்போது சிகிச்சைக்காக சக நடிகர்களின் உதவியை தவசி நாடியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்