ஒரு மகள் என்ற முறையில்! லாஸ்லியா இந்த இழப்பை எப்படி சமாளிப்பாள் என நினைக்க கூட முடியல.. பிரபல தமிழ்ப்பட நடிகை உருக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
2083Shares

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உயிரிழந்த நிலையில் தனது ஆழ்ந்த இரங்கலை நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

இலங்கை பெண்ணான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகை அதுல்யா ரவி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், லாஸ்லியா தந்தை மரியநேசனின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

ஒரு மகள் என்ற முறையில் இந்த கொடூரமான இழப்பை அவளால் எவ்வாறு சமாளிக்க முடியும் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

லாஸ்லியாவுக்கு அவர் குடும்பத்தாரும் கடவுள் தைரியம் கொடுக்க வேண்டுகிறேன், மரியநேசன் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்