லாஸ்லியா அப்பா என்னை விட சிறந்தவர்... ஜெண்டில் மேன்! அன்றே புகழ்ந்து தள்ளிய நடிகர் கமல்ஹாசன்

Report Print Santhan in பொழுதுபோக்கு
5720Shares

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை உயிரிழந்த நிலையில், அவர் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் கமல் பேசிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவர் மரண செய்தியை கேட்டு, பிக்பாஸ் வீட்டில் அவருக்கு ஒரு அப்பாவாக இருந்த இயக்குனர் சேர்ந்த எப்படி மகளே லாஸ்லியா உனக்கு ஆறுதல் கூறுவேன் என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து லாஸ்லியா மற்றும் தந்தை பிக்பாஸ் வீட்டில் சந்தித்து கொண்ட வீடியோக்களை ரசிகர்கள் ஒவ்வொன்றாக தேடி தேடி பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கவின் மீது கொண்ட காதல் சர்ச்சை காரணமாக லாஸ்லியா மக்களிடம் கெட்டப் பெயர் வாங்கிக் கொண்டிருந்த போது, பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த லாஸ்லியாவின் அப்பா, என்ன இது? நான் உன்னை இப்படியா வளர்த்தேன்? அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டு வந்துவிடு என்று மிரட்டுவார்.

அந்த கோபத்தை கவீன் மீது காட்டாமல், அவரை கட்டியணைத்து சில விஷயங்களை பேசுவார்.

இது குறித்து கமல் அன்றைய நிகழ்ச்சியின் போது, லாஸ்லியாவின் அப்பா என்னைவிட சிறந்தவர். ஒரு ஜெண்டில் மேன் போன்று நடந்து கொண்டார்.

கவீனிடம் அவர் நடந்து கொண்ட விதம், மிகவும் அற்புதம், உங்களிடம் அவர் கோபத்தை காட்டவேயில்லை, பார்க்கும் எனக்கு அப்படி இருந்தது. நான் ஒரு அப்பாவா இருந்த என்ன செய்திருப்பேனோ, அதை சிறப்பாக நடந்து கொண்டார் என்று புகழ்ந்தார்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்