லாஸ்லியா தன் தந்தையைப் பற்றி உருக்கமாக பேசிய வீடியோ! இணையத்தில் அதிகம் பகிரும் ரசிகர்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு
10654Shares

கனடாவில் இருக்கும் தனது தந்தைக்காக லாஸ்லியா தந்தை தின வாழ்த்துக்கள் சொன்ன வீடியோ தற்போது சமூக்வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் பிரபலமான இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் தந்தை, மரியநேசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி லாஸ்லியா ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் #Losliya டிரண்டாகி வருகிறது.

இந்நிலையில் லாஸ்லியாவின் வீடியோ ஒன்று இப்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் லாஸ்லியா தன்னுடைய தந்தை எவ்வளவு பிடிக்கும்? அவர் தன்னை எப்படி பார்த்துக் கொண்டார் என்பது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

அதில், நான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேலையில் இருந்தேன், அப்போது அந்த சம்பளம் என்னுடைய தேவைக்கே சரியாகிவிடும், ஆனால் அதை எல்லாம் என் அப்பா புரிந்து கொண்டு, அவர் பணம் அனுப்பி வைப்பார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு என்றால் உடைகள் நிறைய வேண்டும், விசா, டிக்கெட் போன்றவைகள் எல்லாம் தயார் செய்வதற்கு, வாங்குவதற்கும் அவர் அந்தளவிற்கு உதவினார்

தற்போது நான் இருக்கும் இந்த பீல்ட் அவருக்கு பிடிக்கவில்லை, இருப்பினும் எனக்கு பிடிக்கிறது என்பதால், என்னை உற்சாகப்படுத்துகிறார், ஊக்கப்படுத்துகிறார், இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா என்று கூறி முடிக்கிறார்.

இந்த வீடியோவை லாஸ்லியாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்