லாஸ்லியாவுக்கு இப்படி ஒரு நிலையா? உயிரிழந்த தந்தையை பார்க்க முடியுமா? வெளிவரும் தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
6675Shares

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், லாஸ்லியா தற்போது இலங்கையில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கடந்த ஆண்டு தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின், படங்கள், விளம்பரங்கள் என லாஸ்லியா படுபிசியாக இருந்ததால், அவர் ஷுட்டிங்கிற்காக அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார்.

இந்நிலையில், சற்று முன் லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த போது கனடாவில் இருப்பதாக கூறினார். இதனால் உயிரிழந்தது கனடாவிலா? அல்லது இலங்கையிலா? என்பது தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும் லாஸ்லியா இலங்கையில் தற்போது இல்லாததால், அவர் இலங்கைக்கு வந்தாலும் குறைந்த பட்சம் 14 நாட்கள் ஆவது தனிமைப்படுத்திய பின்னரே அவர் குடும்பத்தினரிடம் சேர முடியும் என்பதால், அவரின் நிலையை நினைத்து ரசிகர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்