குழந்தைகளின் ஆபாச காட்சிகளை திரட்டி... பிரபல சின்னத்திரை நடிகர் செய்து வந்த செயல்: கைது செய்த பொலிசார்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர், வெளிநாட்டு சிறார்களை மிரட்டி, அவர்களின் ஆபாச காட்சிகளை திரட்டி, இணையத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 10 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளின் ஆபாச படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக மிரட்டல் விடுத்தும், ஆசை வார்த்தைகள் கூறியும் பிரபல சின்னத்திரை நடிகர் பெற்று வந்துள்ளார்.

அப்படி பெறப்பட்ட ஆபாச காட்சிகளை, வாட்ஸ்ஆப் வாயிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு நடிகர் வழங்கி வந்துள்ளார். அதுமட்டுமின்றி இணையத்திலும் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் மும்பை பொலிசாருக்கு தெரியவர, உடனே பொலிசார் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். அதன் பின் அவரிடம் இருந்த லாப்டாப் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். நடிகர் யார் என்கிற விவரத்தை பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்