பிரபல சீரியல் நடிகைக்கு போன் செய்து நபர் செய்த செயல்: மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்த பயங்கரம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல சீரியல் நடிகையான சரலா, ஆடிசன் என்ற போர்வையில், தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

அவர் அளித்துள்ள ஆன்லைன் புகார் மனுவில், சன் பிக்சர்ஸ் தயாரித்த புதிய படத்திற்கான ஆடிஷனை சமூக ஊடகங்களில் கண்டதாகவும், அதன் பின், அதில் கொடுக்கப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நபர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி எனக் கூறப்படும் வேறொரு நபர் தன்னை தொடர்பு கொண்டு, மோசமாக பேசியதுடன், நெருக்கமாக இருப்பதற்கு நேரில் வர வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு மறுத்ததால், தனக்கு கொலை அச்சுறுத்தல் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சரலா தனது புகாரில் ஆதாரமாக போன் அழைப்பு பதிவுகளை சமர்ப்பித்துள்ளார். நிறுவனத்தின் நிர்வாகியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், பிராண்ட் பெயரை தவறாக பயன்படுத்தியதாக கூறி சன் பிக்சர்ஸ் நிறுவனமும் குறித்த நபர் மீது புகார் அளித்துள்ளது.

இதனால், பொலிசார் குறித்த குற்றவாளியை தேடி வருகின்றனர். சரலா சீரியலில் மட்டுமின்றி தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி மற்றும் வைபவ் நடிப்பில் வெளிவந்த சிக்ஸர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்