நான் தோத்து போய்ட்டேன்... ஏமாந்துட்டேன்! பீட்டர் பால் விவகாரம் குறித்து வனிதா கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு
8731Shares

பீட்டர் பாலுடன் நடந்த பிரச்சனை குறித்து நடிகை வனிதா விஜயக்குமார் கண்ணீர் விட்டு அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை, பிக்பாஸ் பிரபலம், யூ டியூப் பிரபலம் என பன்முக திறமை கொண்ட வனிதா விஜயக்குமார் சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு பின் பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அதை எல்லாம் வனிதா சட்டப்படி பார்த்துக் கொள்வதாக கூறினார்.

இந்நிலையில், சமீபத்தில் வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கும் இடையே பிரச்சனை, இருவரும் பிரிந்துவிட்டதாக செய்தி வெளியானது.

அதை வனிதா இன்று காலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.

இதையடுத்து தற்போது அவர் தன்னுடைய யூ டியூப் சேனலில், பீட்டர் பாலுடன் என்ன பிரச்சனை, நடந்தது என்ன என்பது குறித்து கண்ணீர் விட்டு அழுது பேசியுள்ளார்.

குறிப்பாக, அதில், பீட்டர் பாலுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அதற்காக அவர் மருத்துவமணையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஏன் 14 நாட்கள் தனிமையில் கூட சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் அவர் சிகிரெட் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தவில்லை. நான் அவரை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.

ஆனால் நான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, தோத்து போய்விட்டேன் என் உணர்வுகள் செத்துருச்சி என மிகவும் உருக்கமாக கண்கலங்கினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்