பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Basu in பொழுதுபோக்கு
785Shares

பிரபல தென்னிந்திய நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொச்சியில் நடைபெற்ற ஜனகனமன மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது கொரோனா தொற்று உறுதியானதாக நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டதாவது, அக்டோபர் 7ம் தேதி முதல் இயக்குநரான டிஜோ ஜோஸின் ஜனகனமன படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படப்பிடிப்பின் போது கொரோனா தொடர்பான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பற்றது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது மற்றும் கடைசி நாள் படப்பிடிப்பின் போதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

துரதிஷ்டவசமாக எனக்கு கொரோனா உறுதியானதாக சோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கிறன்.

எனக்கு அறிகுறி ஏதும் இல்லை, நலமாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் சோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.

விரைவில் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி என பிரித்விராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்