குறுகிய காலத்தில் கசந்த 3-வது திருமண வாழ்வு! நடந்தது என்ன? வனிதா வேதனையுடன் வெளியிட்ட பதிவு

Report Print Santhan in பொழுதுபோக்கு
9225Shares

நடிகையான வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என்ற செய்தி வெளியான நிலையில், அது குறித்து வேதனையுடன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வனிதா பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகை வனிதா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து சொந்தமாக யூ டியூப் சேனல் ஆரம்பித்த நிலையில், மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து, பீட்டர் பால் என்பவரை வனிதா 3-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தில் வனிதா மற்றும் திரைப்பிரபலங்கள் சிலரும் மோசமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இதை சட்டப்படி பார்த்து கொள்கிறோம் என்று வனிதா கூற, இதைப் பற்றி பேச்சு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது நடிகை வனிதா, பீட்டர் பாலை வீட்டை விட்டு அடித்து துரத்திவிட்டதாக, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆனால், இது குறித்து வனிதா எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் இருந்தார்.

இதையடுத்து, வனிதா தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வாழ்க்கையில் பல விஷயங்களை எதிர்கொண்ட தைரியமான பெண் நான்.

இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன். தயவு செய்து வேறு எதையும் யூகிக்க வேண்டாம். அன்பால் மட்டுமே என்னை தாக்க முடியும்.

எனக்கு அதிசயங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அப்படி அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன். எனக்கு விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நான் ஒரு போதும் எந்த தவறும் செய்யவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அதை கொடுத்தேன். என் கனவுகளும் நம்பிக்கைகளும் நொறுங்கும் நிலையில் இப்போது இருக்கிறேன். காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கமாகிவிட்ட ஒன்று.

ஆனால், அதில் இருந்து மீண்டு வந்து தைரியமாக இருப்பேன். காதலை நம்பி ஏமாறுவது வேதனையாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கிறது. உங்கள் கண்களின் முன்னால் வாழ்க்கை பறிபோய் கொண்டிருப்பது மிகவும் வேதனையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்