நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்! வைரலாகும் பதிவு: அதிர்ச்சியில் பிரபலங்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு
3006Shares

பிரபல திரைப்பட நடிகரான விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க முடிவு செய்தார்.

அதன் படி அப்படத்திற்கு 800 என்று பெயர் வைக்கப்பட்டது. அதன் பின் தமிழகத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக்கூடாது என திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் என ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, முத்தையா முரளிதன், வருங்காலத்தை கருத்தில் கொண்டு, விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க கூடாது, அவர் திரையுலக பயணம் நின்றுவிடக்கூடாது, எனது கோரிக்கையை ஏற்று அவர் இந்த படத்தை விட்டு விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் பின் விஜய்சேதுபதி, முரளிதரனின் கோரிக்கையை ஏற்று நன்றி, வணக்கம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது இனையவாசி ஒருவர் மிகவும் மோசமான வார்த்தைகளால், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் இதைக் கண்ட திரைப்பிரபலமான சின்மயி, கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு support-ஆக நிக்கிறாங்க இந்த ஊர்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இவர்கள் எல்லாம் மனிதர்களா? தயவுசெய்து இந்த நபரைக் கண்காணித்து அவரைக் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்துங்கள் என்று தமிழக முதல்வர் மற்றும் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளார்.

இதைக் கண்டு பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், இதற்கு காரணமான நபரை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்