14 வயதில் வற்புறுத்தப்பட்டேன்! அப்போது எனக்கு புரிதல் இல்லை: பிரபல நடிகை வேதனையுடன் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான சோனா ஆபிரகாம், சமூகவலைத்தளங்களில் பரவி வரும், தன்னுடைய ஆபாச காட்சிகளை நீக்க பொலிசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நடிகையான சோனா ஆபிரகாம் தன்னுடைய 14 வயதில், பார் சேல் என்ற மலையாளப்படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில், இவர் அண்மையில் சமூக வலைதளங்களில் உள்ள தனது ஆபாச வீடியோ காட்சிகளை நீக்க கோரி புகார் அளித்திருந்த நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதைக் கண்ட அவரின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அவரை மீட்டு காப்பாற்றியுள்ளனர்.

இதையடுத்து, தற்போது, தனக்கு நேர்ந்த அவமானம் குறித்தும், சமூக வலை தளங்களில் தன்னுடைய ஆபாச காட்சி வெளியான பின்னணி குறித்தும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 14 வயதில் தான், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, பார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்ததாகவும், படத்தில் தான் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்ததும் சகோதரியான காதல் சந்தியா தற்கொலை செய்து கொள்வது போல படத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி படம் எடுத்திருந்தார்.

150 பேர் முன்னிலையில் பலாத்கார காட்சியை படமாக்க இயக்குனர் சதீஷ் அனந்தபுரி முடிவு செய்திருந்த நிலையில் தான் நடிக்க மறுத்ததால், தன்னை வற்புறுத்தி இயக்குனர் அலுவலகத்திற்குள் வைத்து பலாத்கார காட்சியை படமாக்கியதாகவும், அந்த காட்சி குறித்த புரிதல் ஏதும் அப்போது தனக்கு இல்லாததால், 10-ஆம் வகுப்பு படித்து வந்த தான் மறு நாள் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டதாகவும், அந்த படம் வெளியான போது கூட முறையாக எடிட் செய்யப்பட்டு ஆபாச காட்சிகள் இல்லாமல் வெளியானதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து எடிட் செய்யப்படாத ஆபாச காட்சிகளை சமூக வலைதளங்களில் யாரோ பரப்பி விட்டுள்ளதாகவும், அது பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தெரியவந்தது.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு அதனை, நீக்க நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் , டிஜிபி, சைபர் கிரைம் பொலிசார் என அனைவரையும் சந்தித்து தான் புகார் அளித்ததாக சோனா அபிரகாம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீடியோக்களை நீக்க இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் ஆபாச இணையதளங்களிலும் தொடர்ந்து பரவிவருவதால் பல தரப்பில் இருந்தும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக சோனா ஆபிரகாம் வேதனை தெரிவித்துள்ளார்

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்