நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது வீடு புகுந்து கொடூர தாக்குதல்! கண்ணீர் விட்டு அழுத உடனிருந்த பெண்.. வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.

இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்ட சர்ச்சையானது.

இது குறித்து பலரும் விமர்சித்த நிலையில் நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவி என்ற பெண்ணுடன் சேர்ந்து கருத்து தெரிவித்தார்.

பின்னர் வனிதா, சூரியாதேவி மீது புகார் கொடுத்தார். இது பரபரப்பான நிலையில், தன்னிடம் நாஞ்சில் விஜயன் பேசி, மன்னிப்புக் கேட்டதாக வனிதா விஜயகுமார் கூறினார்.

இதை நாஞ்சில் விஜயன் மறுத்தார். தான் மன்னிப்புக் கேட்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.

மேலும் வீட்டின் உள்ளே பெண் ஒருவரின் கையில் காயம் இருக்கிறது. அவர் கை வலிப்பதாக அழுது கொண்டே மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறுவது போல வீடியோவில் உள்ளது, மேலும் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் புகைப்படத்தையும் விஜயன் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்