கணவருடன் வெளிநாட்டில் குடியேறிய பிரபல தமிழ்ப்பட நடிகை! சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் மாறிபோன வாழ்க்கை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
3101Shares

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய பிரபல தமிழ் நடிகை பிருந்தா சமையல்காரராக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகளவில் கொரோனா பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது, திரையுலகை சேர்ந்த பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.

இதனால் பல பிரபலங்கள் காய்கறி விற்பது, மீன் விற்பது, மாடு வளர்ப்பது, கார் ஓட்டுவது, ஆட்டோ ஓட்டுவது என தங்களுக்கு தெரிந்த தொழிலை தொடங்கி வருமானத்திற்கு வழி தேடுவதை காண முடிகிறது.

அந்த வகையில் கொரோனா அச்சுறுத்தலால் பிரபல நடிகை ஒருவர் சமையல்காரர் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 1990களில் பிரபலமாக இருந்தவர் நடிகை பிருந்தா.

வாழ்க்கை சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிருந்தா பின்னர் பல படங்களில் நடித்ததுடன் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் 1997ல் கணவருடன் மலேசியாவுக்கு சென்றார் பிருந்தா. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் பிருந்தா.

சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ள பிருந்தா, மலேசியாவின் ஸ்பெஷல் உணவான நாசி லி மாக் என்ற உணவை தானே தயாரித்து சினிமா பிரபலங்களுக்கு கொடுத்து வருகிறார்.

மேலும் பல மலேசிய உணவுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் பிருந்தா, பிரபல நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்து தற்போது சமையல்காரராக மாறியுள்ள பிருந்தாவை திரையுலகினர் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்