தயாரிப்பாளர்கள் எஸ்பிபிக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் அவர் மகன் சரணுக்கு வாய்ப்பு கொடுங்கள் என இயக்குனர் பி.வாசு உருக்கமாக கூறியுள்ளார்.
முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் திகதி சென்னையில் காலமானார்.
அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எஸ்பிபி உடனான நினைவலைகளை பல பிரபலங்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இயக்குனர் பி.வாசு கூறுகையில், எஸ்பிபி உலகையே அழவைத்துவிட்டு நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.
என்னை எப்போதும் கண்ணா என்றே அழைப்பார். கடைசி வரை வாசு என்று கூப்பிட்டதே இல்லை.
தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும், எஸ்பிபிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தீர்களானால் நீங்கள் சரணுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
நாம் மட்டும் அவருக்கு ரசிகர்களல்ல. கடவுளே அவருக்கு ரசிகர்தான். எனவேதான் ‘சங்கரா’ என்று பாடிய பாலசுப்ரமணியத்தை தன் மடியில் அழைத்துக் கொண்டார் என கூறியுள்ளார்.