S.P.B-க்கு அஞ்சலி செலுத்த ஓடிவந்த 50 வயது அம்மா! ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்ன உருக்கமான தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த 50 வயது மதிக்கத்தக்க அம்மா ஓடிவந்து, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அடம்பிடித்ததாக ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனாவால் அனுமதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு அதன் பின் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து கடந்த 25-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மரணம் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில்,எஸ்.பி.பி-க்கு இறுதி அஞ்சலியின் நடந்த சம்பவத்தை, ஆம்புலன்ஸ் டிரைவர் சாந்தகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் நான் நான் ஆம்புலன்ஸை ஓட்டினேன். அவரது தலை அந்த ஸ்ட்ரெச்சரில் கூட படக்கூடாது என தாங்கி பிடித்து கொண்டேன்.

நாங்கள் எதிர்ப்பார்க்காத அளவுக்கு, அவரைக் காண பலர் குடும்பம் குடும்பமாக சாலைகளில் வந்தனர். குறிப்பாக 50 வயது உள்ள ஒரு அம்மா, காரை நிறுத்தி விட்டு, ஓடி வந்து சின்ன குழந்தை போல அடம்பிடித்து, அவருக்கு மரியாதை செலுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்