எஸ்பிபி இல்லாத ஒரு மேடையை... முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம்: கண்கலங்கிய பாடகி சித்ரா

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

இனி எப்போதும் இசை மேடைகள் பழைய நிலைக்கு திரும்பாது என எஸ்பிபி மறைவு தொடர்பில் கண்கலங்கியுள்ளார் பாடகி சித்ரா.

திரைப்பட பாடல்கள் போன்று பல்வேறு இசை மேடைகளிலும் எஸ்பிபியுடன் பல எண்ணிக்கையிலான பாடல்களை பாடியுள்ள சித்ரா,

எஸ்பிபியுடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார். இனி ஒருபோதும் இசை மேடைகள் பழைய நிலைமைக்கு திரும்பாது என்றும் சித்ரா குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சகாப்தம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது என தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்ட சித்ரா,

இசை இனி பழைய நிலைக்கு திரும்பாது. இந்த உலகமும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம்.

சிறந்த பாடகியாக உருவாக தமக்கு எஸ்பிபி அளித்த பரிந்துரைகளுக்கு நன்றி கூற வார்த்தைகள் போதவில்லை.

எஸ்பிபி இல்லாத ஒரு இசை மேடை குறித்து நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

சாவித்ரி அம்மாவுக்கும், சரணுக்கும், பல்லவிக்கும் இரங்கல் மற்றும் பிரார்த்தனை என சித்ரா கண்கலங்கியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்