சீக்கிரம் எழுந்து வானு சொன்னேனே S.P.B! எங்க போன நீ: பேசா முடியாமல் கலங்கிய இளையராஜா

Report Print Santhan in பொழுதுபோக்கு

இசையமைப்பாளரான இளையராஜா, சீக்கிரம் எழுந்து வா என்று சொன்னேனே, எங்க போன நீ என்று கண்கலங்கும் வகையில் பேசியுள்ளார்.

பாடகரான எஸ்.பி.பியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியான போது, இசையமைப்பாளரும், நண்பருமான இளையராஜ சீக்கிரம் எழுந்து வா, உனக்காக காத்திருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

தற்போது எஸ்.பி.பியின் மரண செய்தியை கேட்டு இளையராஜா கடும் துயரத்தில் உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சீக்கிரம் எழுந்து வா என்று சொன்னேன், ஆனால் நீ போய்விட்டாய். எங்கே போன, இங்கு எல்லாம் சூனியாய் இருக்கிறது.

எனக்கு ஒன்றும் தெரியவில்லை, என்ன பேசுவது என்றே தெரியவில்லை என்று பேசமுடியாமல் சில நிமிடங்கள் இளையராஜ மனதின் உள்ளே கலங்கினார்.

அவர் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை என்றாலும், அவர் பேசும் போதே எஸ்.பி.பியின் மரணம் அவரை எந்தளவிற்கு பாதித்துள்ளது என்பது தெரிகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்