S.P.B-யின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்! நாம் தமிழர் கட்சியின் சீமான்

Report Print Santhan in பொழுதுபோக்கு

எஸ்.பி.பியின் மரணம் இசையுலகிற்கு பேரிழப்பு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5-ஆம் திகதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரின் உடல் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பியின் மரணத்தால், திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், அவரது மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தனது பாடல்கள் மூலம் மக்களின் துயரைத் துடைத்தெறிந்தவர், இன்றைக்கு நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்றிருக்கிறார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அவரது மறைவு இசை உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு. மண்ணை விட்டு மறைந்தாலும் காற்றில் கலந்த அவரது கானங்கள் மூலம் காலங்கள் கடந்தும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார் எஸ்.பி.பி" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்