கடைசி நிமிடம் வரை உயிருக்கு போராடி மறைந்த SPB! ரஜினிகாந்த் வேதனையுடன் வெளியிட்டுள்ள வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்பிபி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எஸ்பிபி-யின் மறைவு உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகை சேர்ந்த பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்பிபி மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், எஸ்பிபியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. கடைசி நிமிடம் வரை உயிருக்காக போராடி எஸ்பிபி மறைந்துள்ளார்.

எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை

அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும் அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

எஸ்பிபி-யின் கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்