S.P.B-யின் மரணம்! துணை முதல்வர் ஓ.பி.எஸ் வேதனையுடன் வெளியிட்ட அறிக்கை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பி உயிரிழந்த நிலையில் அவரனின் மரணம் குறித்து துணை முதல்வர் வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

அவரின் மரணத்தால் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழத்தின் துணை முதல்வரான ஓ.பி.பன்னீர் செல்வம் திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதே போன்று திமுக தலைவர் ஸ்டாலின், எஸ்.பி.பி பாடல்களால் என்றென்றும் உயர்த்திருப்பார். அவரது மறைவு இசை உலகிற்கு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவரது மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்