பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி உயிரிழந்துவிட்டதாக, நடிகரான வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் எஸ்.பி.பி உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சரியாக 1.04 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த எஸ்பிபிக்கு வயது 75 ஆகும், அவரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்