S.P.B இறந்த செய்தியை கேட்டு வருந்துகிறேன்! பேஸ்புக்கில் பதிவிட்டு உடனடியாக நீக்கிய பிரபலம்

Report Print Basu in பொழுதுபோக்கு

பிரபல பாடகர் எஸ்.பி.பி மரணமடைந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மர்கண்டேய கட்ஜூ பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செப்படம்பர் 24-ஆம் திகதி இரவு பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எஸ்.பி.பி உடல்நலம் பெற வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செப்டம்பர் 25-ஆம் திகதி காலை 9 மணியளவில், பிரபல பாடகர் எஸ்.பி.பி மரணமடைந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் என முன்னாள் நீதிபதி மர்கண்டேய கட்ஜூ பேஸ்புக்கில் பதிவிட்டார்.

பின்னர், உடனே எஸ்.பி.பி மிகவும் கவலைக்கிடாக இருப்பதாக பதிவை மாற்றிவிட்டார். மேலும், தனக்கு தவறாக தகவல் அளிக்கப்பட்டதாக மன்னிப்பு கோரினார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்த நீங்கள் ஒரு தகவலின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் எப்படி பதிவிட்டீர்கள் என நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்