பிரபல நடிகர் ராமராஜன் கொரோனாவில் இருந்து மீண்டார்! ரசிகர்களுக்கு நன்றி என உருக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டதாக தெரிவித்துள்ள நடிகர் ராமராஜன் அது தொடர்பில் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நோயிலிருந்து குணமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.

அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர்.

உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது. இதற்காக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ.பி.எஸ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், அலைப்பேசியிலும், நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்களுக்கு நன்றி.

இதோடு சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும், என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்