அவர் மீண்டு வர வேண்டும்: எஸ்பிபி தொடர்பில் நடிகர் சல்மான் கான் டுவீட்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபல நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் திகதி முதல் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகிறார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.

பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார்.

உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சரண் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

இந்த நிலையில் எஸ்பிபியின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் மொத்தமாக உலுக்கியது.

இதனிடையே, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என எனது

இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார்... என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்