அவரிடம் மது வாடை வந்தது! இயக்குனரால் நேர்ந்த மோசமான அனுபவத்தை போட்டுடைத்த தமிழ் படத்தில் நடித்த நடிகை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

முன்னணி இயக்குனர் தனக்கு ஆபாச படம் காட்டினார் என பிரபல நடிகை பாயல் கோஷ் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஓசரவல்லி படத்தில் நடித்து பிரபலமாகி தொடர்ந்து அதிக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் பட வாய்ப்புக்காக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையை வெளியிட்டுள்ளார்.

பாயல் கோஷ் கூறுகையில், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ள ஒரு இயக்குனரை அவரது வீட்டில் போய் சந்தித்தேன். நன்றாக பேசினார்.

அவரிடம் மது அருந்திய வாசனை வந்தது. என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு வீடியோ கேசட்டுகள். டி.வி.டி.கள் இருந்தன. ஒரு கேசட்டை எடுத்து டி.வி.யில் போட்டார்.

அதில் ஆபாச படம் ஓடியது. அதை பார்த்து அதிர்ச்சியானேன். சினிமாவில் இதெல்லாம் சகஜம். நான் அழைத்தால் பல பெண்கள் என்னுடன் வந்து இருந்து விட்டு போவார்கள் என்றார். நான் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்து விட்டேன். அந்த சம்பவம் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்