கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல தமிழ் நடிகர் காலமானார்

Report Print Basu in பொழுதுபோக்கு

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திரைப்பட நடிகரும், மூத்த ஊடகவியலாளருமான ப்ளோரன்ட் சி.பெரேரா (வயது 67) சென்னையில் காலமானார்.

நிறைய துணை வேடங்களில் நடித்த பிரபல தமிழ் நடிகரான புளோரண்ட் சி.பெரேரா, விஜய்யின் புதிய கீதை படத்தில் அறிமுகமானார்.

இவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ப்ளோரன்ட் சி.பெரேரா கும்கி, தொடரி, கயல், பொதுவாக எம்மனசு தங்கம் உட்பட கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் நிர்வாக பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளோரன்ட் சி.பெரேரா மறைவுக்கு திரையிலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்