மனசாட்சி உலுக்குகிறது! மரண வாக்குமூலத்தில் கூட எழுத்து பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்! நடிகர் சூர்யா வேதனை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான சூர்யா நீர் தேர்வு பயத்தால், ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டதால், இது என் மனசாட்சியை உலுக்குகிறது என்று வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா சற்று முன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது.

இறந்து போன மாணவர்களின்‌ மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப்‌ பிழைகளை கண்டுபிடிக்கும்‌ சாணக்கியர்கள்‌, 'அனல்‌ பறக்க' விவாதிப்பார்கள் என்று வேதனையுடன் வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த அறிக்கையை பலரும் துணிவு மிக்க அறிக்கை என்று பாராட்டி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்