வடிவேலு பாலாஜியின் ஆசை கடைசியில்... நிறைவேறாமல் போச்சே: கலங்கிய KPY அமுதவாணன்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல காமெடியனான வடிவேலு பாலாஜி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், அவரின் ஆசை என்ன என்பது குறித்து அவருடைய நண்பரான கலக்கப்போவது யாரு அமுதவாணன் கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான வடிவேலு பாலாஜி இன்று மரணமடைந்தார்.

அவரின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் வடிவேல் பாலாஜி குறித்து அவருடைய நண்பரான அமுதவாணன், மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம். யோசிக்கும் போதே படபடப்பாக இருக்கிறது.

அது இது எது 2 பண்ணலாம் என்று திட்டம் போட்டிருந்தோம்.

அதுமட்டுமின்றி, அவருடைய மனைவியுடன் கலந்துகொள்ளும் MR & MRS சின்னத்திரை நிகழ்ச்சியில் வித்தியாசமான டான்ஸ் வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால், அடுத்த சில நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளார்

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்