வடிவேலு பாலாஜியை கடைசியாக பார்த்த போது... அவனுக்கு இந்த பிரச்சனை இருந்தது! கண்கலங்கிய ராமர்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல காமெடியனான வடிவேலு பாலாஜியின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அவரின் நெருங்கிய நண்பர் அவரை எப்போது கடைசியாக பார்த்தோம் என்பது குறித்து வேதனையுடன் கூறியுள்ளார்.

கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான வடிவேலு பாலாஜி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, அதன் பின் பக்கவாதத்தால், படுக்கையிலேயே முடங்கியுள்ளார்.

அதன் பின் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், போதிய பணம் இல்லாமல், இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் மரணச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், அவரின் நெருங்கிய நண்பரான ராமர், பத்து, 20 நாட்களுக்கு முன்னரே அவன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கேள்விபட்டோம், ஆனால் பார்க்க முடியவில்லை.

அவனை நாங்கள் கடைசியாக விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஷுட்டிங்கில் பார்த்தேன், அப்போது கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல், வீசிங் பிரச்சனையால் அவதிப்பட்டான், அதன் பின் 5 நாட்கள் கழித்து ஷுட்டிங்கின் போது அவனை எதிர்பார்த்தோம்.

ஆனால், அப்போது தான் அவருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வந்ததை கேள்விப்பட்டோம் என்று பேசினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்