அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்தார்! கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சீரியல் நடிகை சம்பவத்தில் எதிர்பாராத திருப்பம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல சீரியல் நடிகை கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் எதிர்பாராத புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மெளன ராகம், மனசு மமதா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ள ஸ்ரவானி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்த தேவராஜ் ரெட்டி டிக் டாக்கில் ஸ்ரவானிக்கு பழக்கமானார். அடிக்கடி இருவரும் இணைந்து பல காதல் வசனங்களுக்கு டிக்டாக் செய்த நிலையில் காதலிக்க தொடங்கினர்.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரவானிக்கும் தேவராஜூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேவராஜை விட்டு ஸ்ரவாணி விலகியதாக கூறப்படுகிறது.

இதனால் தேவராஜ் நடிகை ஸ்வரானியை பிளாக்மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்ரவானியை துன்புறுத்தியதாகவும் அவரின் குடும்பத்தார் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் தான் அவர் உயிரை மாய்த்து கொண்டார் எனவும் புகார் அளித்தனர்.

புகாரை பெற்ற பொலிசார் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் ஸ்ரவானியை டார்ச்சர் செய்யவில்லை என்றும், அவரது பெற்றோரும் சாய் என்ற இளைஞரும் தான் டார்ச்சர் செய்ததாக கூறியுள்ளார்.

கடந்த 7-ம் திகதி சாய் தன்னை சந்திக்க வர வேண்டும் என நடிகையை அழைத்ததாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தேவராஜ் கூறியுள்ளார்.

தேவராஜினின் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிசார், பெற்றோர் மற்றும் சாய் என்ற அந்த நபரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவிலேயே ஸ்ரவானியின் மரணத்துக்கு யார் காரணம் என தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்