பிரபல சீரியல் நடிகை வீட்டு கழிப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல சீரியல் நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

26 வயதான ஸ்ரவானி மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ஸ்ராவானி நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரவானியின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையில் டிக்டாக் ஆப் மூலம் அறிமுகமான தேவராஜ் ரெட்டி என்ற நபர் தனது ஸ்ரவானியிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக அவரது சகோதரர் ஷிவா கூறியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் தேவராஜ் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்