பிரபல தமிழ் திரைப்பட நடிகருக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் காலமானார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் துரைபாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழில் ஜெமினி, மெளனம் பேசியதே, ரன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் துரைபாண்டியன்.

இவர் வழக்கறிஞராகவும் உள்ளார், இந்த நிலையில் நாள்பட்ட நுரையீரல் பிரச்னை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைபாண்டியனுக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துரைபாண்டியன் மரணத்துக்கு கொரோனா தொற்றோ அல்லது வேறு காரணங்களோ இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

அதிமுக கட்சியின் வழக்கறிஞர் பிரிவிலும் பணியாற்றி வந்த துரைபாண்டியன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்