நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது வீட்டுக்கு வந்துவிட்டதாக வனிதா தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பீட்டர் பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதன் பின்னர் வனிதா டுவிட்டரில் கணவர் தொடர்பில் உருக்கமாக சில பதிவுகளை வெளியிட்டார்.
அதில், வாழ்க்கை கடினமானதே... எதிர்கொள்ளுங்கள்... எல்லாமே சரியாகும்.பீட்டர் பால் ஒரு அழகான ஆத்மா, அவர் விரைவில் உங்கள் இதயங்களை வெல்வார் அவர் சாதிக்கப் பிறந்தவர் என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், எல்லாம் நலமாக உள்ளது, வீட்டிற்கு வந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார் வனிதா.
இதன்மூலம் மருத்துவமனையில் இருந்து பீட்டர் பால் வீட்டிற்கு வந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.All is well...back home..🙏
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 26, 2020