பல மாதங்களுக்கு முன்னரே வந்த தற்கொலை எண்ணம்! உடலில் இருந்த நோய்... தூக்கில் தொங்கிய நடிகை அனுபமா குறித்து அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
3588Shares

பிரபல நடிகை அனுபமா பதக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 8 மாதங்களுக்கு முன்னரே அவருக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

போஜ்புரி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் அனுபமா (40).

இவர் மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோவில் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும், யாரையுமே நம்பமுடியவில்லை எனவும் அனுபமா விரக்தியாக பேசினார்.

இந்த நிலையில் அனுபமா தொடர்பில் மேற்கு இந்தியா சினி ஊழியர்களின் கூட்டமைப்பு தலைவர் திவாரி சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், தொழில் ரீதியாக அனுபமாவை சந்தித்துள்ளேன்.

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அனுபமாவுக்கு சில காலமாக புற்றுநோய் பாதிப்பு இருந்தது.

8 மாதங்களுக்கு முன்னரே புற்றுநோயால் ஏற்படுகிற வலியை பொறுத்து கொள்ள முடியவில்லை, என் வாழ்க்கையை முடித்து கொள்ள போகிறேன் என பேஸ்புக்கில் அனுபமா பதிவிட்டிருந்தார்.

ஆனால் அதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

அனுபமா தற்கொலை தொடர்பாக பொலிசார் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்